கனடாவில் இரண்டு இந்திய இளைஞர்களை பலி வாங்கிய சாலை விபத்து
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், கனடாவில் சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ளார்கள்.
பலியானவர்கள் குறித்த விவரங்கள்
இந்த விபத்து எதனால் நேர்ந்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியாத நிலையில், விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் Mohali என்னுமிடத்தையும், மற்றவர் Bathinda என்னும் இடத்தையும் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவருடைய பெயர் Harshanur Singh (20). அவர் 2023ஆம் ஆண்டு டிசம்பரில்தான் கல்வி கற்பதற்காக கனடாவுக்குச் சென்றுள்ளார்.
மிக நன்றாக படிக்கக்கூடியவரான Harshanurஇன் இழப்பு அவரது குடும்பத்தினரிடையே சொல்லொணாத் துயரத்தை உருவாக்கியுள்ளது.
Harshanur தனது நான்கு நண்பர்களுடன் Coquihalla நெடுஞ்சாலையில் காரில் பயணித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் Harshanurம் Bathindaவைச் சேர்ந்த அவரது நண்பரும் பலியாக, மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தங்கள் மகனுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியை Harshanurஇன் குடும்பத்தினர் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |