2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனாவிடமிருந்து தப்ப முடியாது! முன்னணி விஞ்ஞானி சொல்லும் எச்சரிக்கை தகவல்
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மக்களும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என முன்னணி விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ஜெர்மி பிரவுனே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிறைய பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அவர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
ஆனால் அவர்களுக்கு கடுமையான தொற்றுநோய்களைக் காட்டிலும் லேசான பாதிப்பே ஏற்படும்.
இப்போது பிரித்தானியாவில் பரவும் பெரும்பாலான நோய்த்தொற்றுக்கு டெல்டா மாறுபாடு தான் காரணம், இது முன்பு தோன்றிய மாறுபாடுகளை விட மாறுபட்ட அறிகுறிகளை கொண்டுள்ளது.
டெல்டா மாறுபாடு தொற்று பாதிப்பலிருந்து பாதுகாப்பது கடினம் என பேராசிரியர் ஜெர்மி பிரவுன் எச்சரித்துள்ளார்.