பிரித்தானியாவில் இளைஞரை கொன்று காரில் உடலை மறைத்த இருவர்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
லண்டனில் 34 வயது இளைஞரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட இளைஞர்
34 வயது இளைஞர் ஜஸ்டின் ஹென்றி அக்டோபர் 2023-ல் காணாமல் போனதை தொடர்ந்து பொலிஸார் தேடுதல் வேட்டை தொடங்கினர்.
அப்போது சிசிடிவி காட்சிகள், தொலைபேசி தரவு மற்றும் தடயவியல் ஆய்வுகள் ஆகியவற்றை கொண்டு ஜஸ்டின் ஹென்றி கொலை செய்யப்பட்டு அவரது உடல் தெற்கு லண்டனில் காரில் மறத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
Left: Lewis Benjamin, Right:Justin Henry
இரண்டு நபர்கள் கைது
இதையடுத்து 30 வயதுடைய லூயிஸ் பெஞ்சமின், ஜஸ்டின் ஹென்றியை கொன்று குற்றத்தை மறைக்க முயற்சி செய்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
பின்னர் லூயிஸ் பெஞ்சமின் மற்றும் குற்றத்திற்கு உதவிய அவரது 29 வயது நண்பர் ஜமால் அலி-ரிச்சர்ட்ஸ் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
வூல்விச் நீதிமன்றத்தில் நடைபெற்ற 8 வார விசாரணைக்கு பிறகு இருவரும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட செப்டம்பர் 11ம் திகதி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வெளியான விவரங்களின்படி, லூயிஸ் பெஞ்சமினுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜமால் அலி-ரிச்சர்ட்ஸுக்கு 8 ஆண்டுகள் 6 ஆறு மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |