இந்திய குடியுரிமையை துறந்து 2 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்
2 லட்சம் இந்தியர்கள் தங்களுடைய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
வெளிநாடுகளில் குடியேற்றம்
இந்திய மாநிலங்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினரான ராகவ் சதா கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அவர், இந்தியர்கள் எவ்வளவு பேர் தங்களுடைய குடியுரிமையை துறந்து நாட்டை விட்டு வெளியேறினர் என்றும், அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதையும் கேட்டார்.
இவரின் கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் எழுத்துபூர்வமாக பதில் அளித்திருந்தார்.
அவர் அளித்த பதிலில், "கடந்த 2023 -ம் ஆண்டில் இந்திய குடியுரிமையை வேண்டாம் என துறந்து விட்டு 2 லட்சத்து 16 ஆயிரத்து 219 பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
தங்களது குடியுரிமையை இந்தியர்கள் துறப்பது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். இன்றைய அறிவுசார் பொருளாதாரத்தில் உலகளாவிய பணியிட திறனை இந்திய அரசு அங்கீகரிக்கிறது.
வளமையான மற்றும் செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்தோரை இந்தியாவின் சொத்தாக திகழ்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |