ஒரே சமயத்தில் இன்று உருவான 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்- வானிலை மையம்
ஒரே சமயத்தில் இன்று 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு உருவானது.
இது வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வட கிழக்கு நோக்கி, கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு ஜார்க்கண்ட் வழியாக பீகாரை நோக்கி நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் படிப்படியாக பலவீனம் அடையும்.

இதேபோல கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் மெதுவாக வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலையில் அதே பகுதியில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து பின்னர் படிப்படியாக பலவீனம் அடையும்.
புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        