கனடாவில் 2 பேருக்கு 'Omicron' வைரஸ் கண்டுபிடிப்பு! வெளியான முக்கிய தகவல்
கனடாவில் இரண்டு பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. சற்று ஓய்திருந்த கொரோனா ஓரோப்பிய நாடுகளில் மீண்டும் உச்சம் அடைந்து வருகின்றது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை அடுத்து ஒமிக்ரான் வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு எனக் கூறியுள்ளது. தென்ஆப்பிரிக்காவை தொடர்ந்து இன்னும் பிற நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனடாவில் இரண்டு நபர்களுக்கு புதியவகை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஓமிக்ரான் வைரசின் பரவல் காரணமாக ஏழு ஆப்பிரிக்க நாடுகளின் பயணத்திற்கு கனடா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.