பிரித்தானியாவில் கால்நடைத் தீவனத் தொட்டிக்குள் விழுந்த இருவர்: சோகத்தில் முடிந்த மீட்பு
பிரித்தானியாவில் கால்நடைத் தீவனத் தொட்டிக்குள் விழுந்த 2 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கால்நடைத் தீவன தொட்டிக்குள் விழுந்த நபர்கள்
பிரித்தானியாவின் செஷயர்(Cheshire) பகுதியில் உள்ள பண்ணையில் இருந்த ராட்சத கால்நடை தீவனத் தொட்டிக்குள்(Silage Tank) தவறி விழுந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 42 மற்றும் 72 வயது நபர்கள் இரண்டு பேர் உயிரிழந்து இருப்பது அப்பகுதி விவசாய மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்டன் பை பட்வொர்த்(Aston by Budworth) பகுதியில் உள்ள கேன் லேனில்(Cann Lane) புதன்கிழமை மதியம் 12.20 மணியளவில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.
தொட்டிக்குள் விழுந்த இரண்டு பேரையும் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி வெளியே எடுத்தனர்.
இருப்பினும் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |