பிரித்தானியாவில் விமான நிலையத்திற்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளான விமானம்! எத்தனை பேர் பலி? வெளியான தகவல்
பிரித்தானியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விமான நிலையத்திற்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு Sussex, Chichester அருகே உள்ள Goodwood விமான தளத்திற்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானது.
Goodwood விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தி விபத்தில் 65 மற்றும் 58 வயதுடைய இரண்டு ஆண்கள் பலியானதாக Sussex பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக விமான விபத்து விசாரணை பிரிவு (AAIB) தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அப்பகுதியைத் தவிர்க்குமாறு Sussex தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வலியுறுத்தியுள்ளது.