மாட்டிறைச்சி விற்றதற்காக 2 பேரை சட்டையில்லாமல் அடித்து இழுத்துச்சென்ற கும்பல்! வைரலாகும் வீடியோ
அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில், பிலாஸ்பூர் மாவட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இருவர் அரை நிர்வாணமாக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு ஊர்வலம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, அதில் இரண்டு ஆண்கள் சட்டை இல்லாமல் காலாடைகள் மட்டும் அணிந்தபடி தெருவில் அடித்து விரட்டிச்செல்லப்படுவதைக் காணலாம். அவர்களை ஒரு கும்பல் பின்தொடர்ந்து செல்கிறது.
அதில் ஒருவர் தனது பெல்ட்டால் விரட்டப்படும் நபரை அடிப்பதைக் காணலாம். பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் ஒன்றும் செய்யமுடியாமல் மௌனமாக செல்வதை காணலாம். மற்றவர்கள் இதனை தங்கள் தொலைபேசிகளில் பதிவு செய்வடகியும் காணமுடிகிறது.
அந்த கும்பல் அவர்கள் இருவர் மீதும் பொலிஸில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் 33 கிலோ மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சகர்பட்டா பொலிஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, குற்றம் சட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 50 வயதான நரசிங் ரோஹிதாஸ் மற்றும் 52 வயதான ராம்நிவாஸ் மெஹர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டதில், இருவரும் இறைச்சி ஏற்றப்பட்ட வெள்ளை சாக்குகளுடன் பிடிபட்டதாகக் கூறுகிறது. சாக்கு பைகளை பார்த்ததும் சந்தேகம் வலுத்தது. அந்த சாக்கு மூட்டைகள் குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, அது மாட்டிறைச்சி என்று ஒப்புக்கொண்டனர்.
அதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த கூட்டத்தினர் அவர்களை கடுமையாக அடிக்க ஆரம்பித்தனர். இரண்டு பேரின் உள்ளாடைகள் கழற்றப்பட்டு, பின்னர் பெல்ட்களால் அடிக்கப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்து வந்து ஆத்திரமடைந்த கும்பலிடம் இருந்து அவர்களை விடுவித்தனர். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இறைச்சியை கால்நடை மருத்துவமனை பரிசோதித்து வருவதாக விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர்களது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால், இருவரின் ஆடைகளை கழற்றி தெருவில் வசைபாடுவதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.