பிரித்தானியாவில் இளைஞர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் இருவர் கொலை! வெளியான முதல் புகைப்படம்
பிரித்தானியாவின் Doncaster பகுதியில் இளைஞர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் Janis Kozlovskis(17) மற்றும் Ryan Theobald(20) ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்த 18 வயது நபர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
Doncaster பகுதியில் உள்ள Silver Street என்ற இடத்தில் தொடங்கிய இந்த வாக்குவாதம் High Street பகுதியை தாண்டியுள்ள kfc முன்பு முடிவடைந்து உள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 17 வைத்து சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்ட்டுள்ளார்.
மேலும் கொலை செய்யப்பட்ட நபர்களின் பிரேத பரிசோதனையில் இருவரும் ஆயுதத்தால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து South Yorkshire பொலிஸார் கூறுகையில், இதில் பல இளைஞர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாகவும், கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி விரைவில் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், சாட்சிகள் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.