மழையால் ஏற்பட்ட பள்ளம் - மனித பாலம் அமைத்து 35 பள்ளிக்குழந்தைகளை மீட்ட இளைஞர்கள்
மழையால் பாதை துண்டிக்கப்பட்டதில், இளைஞர்கள் இருவர் மனித பாலம் அமைத்து குழந்தைகளை மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மழையால் துண்டான பாலம்
பஞ்சாப் மவாட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. கடந்த புதன்கிழமை மோகா மாவட்டத்தில் பெய்த கனமழையால், மல்லேயன் கிராமத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும், மல்லேயன் மற்றும் ரசூல்பூர் கிராமங்களை இணைக்கும் பிரதான சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கனமழை காரணமாக, பள்ளி மாணவர்களை முன்கூட்டியே வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
பிரதான பாதையில் 5 அடியளவில் பள்ளம் ஏற்பட்டதால், அந்த வழியாக செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் தவித்தனர்.
மனித பாலம்
சம்பவத்தை கேள்விப்பட்ட அந்த கிராமத்தை சேர்ந்த சுக்பிந்தர் சிங் மற்றும் ககன்தீப் சிங், மற்ற கிராமவாசிகளுடன் சேர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"पंजाब के मोगा से मानवता की मिसाल — जब सड़क बह गई, तो एक युवक ने अपनी पीठ को पुल बना दिया।"
— Ghar Ka Ghat Ka (@GharKa_GhatKa) July 24, 2025
गांव के इस सच्चे हीरो ने 30 स्कूली बच्चों को सुरक्षित पार कराया।
ऐसी तस्वीरें याद दिलाती हैं — इंसानियत अभी ज़िंदा है।#MogaNews #ViralHero #Punjab #HumanBridge #Inspiration #RealLifeHero pic.twitter.com/LC86xnaJD5
மாணவர்களும், பொதுமக்களும் அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் இருப்பதை கவனித்த இருவரும், தங்கள் உடல்களை அந்த பள்ளத்தின் மீது நீட்டி, முதுகுகளால் ஒரு மனிதப் பாலத்தை உருவாக்கினார்கள்.
35க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் 10 பெரியவர்கள் அவர்கள் முதுகின் மீது ஏறி நடந்து அந்த பள்ளத்தை கடந்து மறுபுறம் சென்றனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துணிச்சலாக சமயோசித்ததுடன் அவர்கள் செய்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |