பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் இருவர் பலி
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் இருவர் ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி பலியாகியுள்ளார்கள்.
புலம்பெயர்வோர் இருவர் பலி
நேற்று காலை பிரான்சிலிருந்து புறப்பட்ட சிறுபடகொன்றில் சுமார் 30 புலம்பெயர்வோர் பயணித்த நிலையில், சிறிது நேரத்தில் அந்தப் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரெஞ்சு மீட்புப் படகொன்று சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த எட்டு பேரை மீட்டுள்ளது. ஆனால், அவர்களில் இருவர் உயிரிழந்துவிட்டார்கள். மேலும் ஒருவரைக் காணவில்லை.
அவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இந்த ஆண்டில் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |