ஸ்காட்லாந்தில் மாயமான மீன்பிடிப் படகு: 3 மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
2 Missing After Fishing Boat Disappears in Scotland: ஸ்காட்லாந்தில் மீன்பிடிப் படகு ஒன்று மாயமானதை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையானது நடத்தப்பட்டு வருகிறது.
மாயமான மீன்பிடிப் படகு
ஸ்காட்லாந்தில் 3 மீனவர்களுடன் அவுட்டர் ஹெப்ரைட்ஸ் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு காணாமல் போனதை அடுத்து தேடுதல் வேட்டையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
லூயிஸ் தீவின் வடக்கு முனையில் உள்ள போர்ட் ஆஃப் நெஸ் கடலோர பகுதியில் பயணித்த இந்த படகு கரைக்கு திரும்பாததை அடுத்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செவ்வாய்க்கிழமை இரவு 11.35 மணிக்கு இது தொடர்பாக ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேடுதல் வேட்டையில் 2 தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர்கள், 1 விமானம், 6 மீட்புக் குழுக்கள், 2 லைப்போட்கள் மற்றும் ஸ்காட்லாந்து காவல் துறையின் படகு ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீனவர் சடலமாக மீட்பு
படகில் இருந்த மூன்று பேரில் ஒரு மீனவரின் உடலை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
காணாமல் போயுள்ள மற்ற இருவரையும் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக ஸ்காட்லாந்து காவல்துறை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக் காற்று மீட்பு பணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.