சந்திரயான்-3 திட்டத்தில் 3 -ல் 2 இலக்குகள் நிறைவு! இஸ்ரோ தகவல்
சந்திரயான்-3 திட்டத்தில் 3 இலக்குகளில் 2 இலக்குகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
மேலும், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்றும், நிலவை அடைய 40 நாள்கள் ஆகும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு மாலை சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதனால் நிலவில் இதுவரை யாரும் ஆய்வுகள் மேற்கொள்ளாத பகுதியில் இஸ்ரோ ஆய்வு மேற்கொண்டது என்ற பெருமையை இந்தியா பெற்றது.
பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது. அதற்கான வீடியோவும் இஸ்ரோ வெளியிட்டது.
3 -ல் 2 இலக்குகள் நிறைவு
இந்நிலையில், சந்திரயான் 3 திட்டத்தின் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ கூறியுள்ளது. மேலும் சந்திரயான் 3 திட்ட இலக்குகளில் 3ல் 2 நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, நிலவின் மேற்பரப்பில் லேண்டர் கலனை பாதுகாப்பாக தரை இறக்குதல், லேண்டரில் இருந்து ரோவர் வாகனத்தை பத்திரமாக கீழ் இறங்கி உலவவிடுதல் மற்றும் ஆய்வுக் கருவிகள் மூலம் அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை 3 இலக்குகள் ஆகும். இதில், 2 இலக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |