அம்பானி வீட்டு திருமணத்திற்கு அத்து மீறி நுழைந்த 2 பேர் கைது
ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமணத்திற்கு அத்து மீறி நுழைந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்து மீறி நுழைந்த 2 பேர் கைது
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
குறித்த திருமணமானது பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி என பல சர்வதேச பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு அத்து மீறி நுழைந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் வெங்கடேஷ் நரசைய்யா அல்லூரி (வயது 26) மற்றும் முகமது ரஃபி ஷேக் (28) ஆகியோர் திருமணம் மண்டபத்திற்கு நுழைந்துள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமாக இருவர் சுற்றி திரிந்ததாவும் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து வெளியேற்றியுள்ளனர்.
வெளியேற்றப்பட்ட இருவரும் மீண்டும் யாருக்கும் தெரியாமல் உள்நுழைய முயற்சித்துள்ளனர்.
இதை பார்த்து சந்தேகித்த பாதுகாவலர்கள் 2 பேரையும் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் பொலிஸாரினார் கைது செய்யப்பட்ட இருவருக்கும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |