இங்கிலாந்து வெற்றியை கொண்டாட லண்டனில் ரசிகர்கள் செய்த செயல்! பொலிசார் காயம்.. 9 பேர் கைது: வெளியான வீடியோ
யூரோ 2020 காலிறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதைக் கொண்டாடும் போது லண்டனில் கால்பந்து ரசிகர்களுடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்ததாக லண்டன் பெருநகர பொலிசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை, ரோமில் நடந்த உக்ரைனுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஜூலை 7 ஆம் திகதி லண்டனில் உள்ள வெம்ப்லி மைதானத்தில் நடக்கும் அரையிறுதியில் இங்கிலாந்து அணி டென்மார்க்கை எதிர்கொள்கிறது.
உக்ரைனுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதை கொண்டாடுவதற்காக இங்கிலாந்து ரசிகர்கள் தெருக்களில் குவிந்தனர்.
இந்நிலையில், தலைநகர் லண்டன் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து சுகாதார நெருக்கடியில் இருப்பதாகல் லீசெஸ்டர் சதுக்கத்தில் கூடிய ரசிகர்களை பொலிசார் கலைக்க முயன்றுள்ளனர்.
Auseinandersetzungen von Fußballfans nach Englands Sieg mit der Polizei auf dem Londoner Leicester Square: pic.twitter.com/QaENunJcVb
— CS_City-Solutions P-Mueller ? ?? ?? ?? (@mueller_nyc) July 4, 2021
இதன் போது ரசிகர்கள் பொலிசாரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்ததாக லண்டன் பெருநகர பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என காவல்துறை துணை உதவி ஆணையர் Jane Connors கூறினார்.
Highlights from today’s battle between London’s Met Police (mask wankers) and England fans in Leicester Square.
— Tony ?????????✌? (@TRFlAGSHAGGER) July 4, 2021
Cc paulbrown_uk
Tommy Robinson telegram pic.twitter.com/hRfGPER5Uu
காவல்துறையினர் ஒன்பது பேரை கைது செய்தனர், அவர்களில் மூன்று பேர் பொலிஸ் அதிகாரியைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள், நான்கு பேர் வன்முறையில் ஈடுபட்டதற்காக, ஒருவர் உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டவர், மற்றொருவர் குடிபோதையில் மற்றும் ஒழுங்கற்ற நடத்தைக்காக என Jane Connors கூறினார்.
யூரோ போட்டிகளை மக்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் ரசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பொதுமக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், குற்றம் மற்றும் வன்முறைகளை தடுக்கவும், எந்தவொரு சம்பவங்களுக்கும் திறம்பட பதிலளிக்கவும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என Jane Connors கூறினார்.