ஏர் கனடா விமான விபத்தில் இருவர் பலி? அதிரவைக்கும் புதிய தகவல்கள்
அமெரிக்காவின் நியூயார்க்கில் நிகழ்ந்த ஏர் கனடா விமான விபத்து தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் கனடா விமான விபத்து
இன்று அதிகாலை, கனடாவின் மொன்றியலிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள LaGuardia விமான நிலையத்தில் சென்று இறங்கிய ஏர் கனடா விமானம் ஒன்று, ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
BREAKING 🚨🚨 #LaGuardia / #NewYork
— OC Scanner 🇺🇸 🇺🇸 (@OC_Scanner) March 23, 2026
New photos have emerged of the crash between an Air Canada flight and a Fire Truck tonight at La Guardia International Airport, last 2 images were taken by a passenger on the plane.
There is no official confirmation of any deaths yet. pic.twitter.com/sGkxYVxUPH
விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக ட்ரக் ஒன்று குறுக்கே வர, விமானம் ட்ரக் மீது மோதியுள்ளது. சில ஊடகங்கள், ட்ரக் என குறிப்பிடப்பட்டுள்ள அந்த வாகனம் ஒரு தீயணைப்பு வாகனம் என தெரிவித்துள்ளன.
அதிரவைக்கும் புதிய தகவல்கள்
இதற்கிடையில், விபத்து தொடர்பில் அதிரவைக்கும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஊடகங்கள், அந்த விபத்தில் ஏர் கனடா விமானத்தின் விமானியும் துணை விமானியும் உயிரிழந்துவிட்டதாகவும், பல பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம்
இந்நிலையில், விபத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, விபத்துக்குக் காரணமான அந்த ட்ரக், குறிப்பிட இடத்துக்கு பயணிக்க அனுமதி கோரியுள்ளது.
விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்த அலுவலர் ஒருவர் அதற்கு அனுமதியளித்துள்ளார்.
ஆனால், உடனடியாகவே அங்கு விமானம் ஒன்று வருவதை உணர்ந்த அவர், அந்த ட்ரக்கை நிறுத்துமாறு கூற, சில விநாடிகளுக்குள் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது.
அவர், ட்ரக்கை நிறுத்துங்கள், நிறுத்துங்கள் எனக் கூறுவதையும், நான் தவறு செய்துவிட்டேன் என கூறுவதையும் வெளியாகியுள்ள ஆடியோவில் தெளிவாகக் கேட்க முடிகிறது.
🚨#UPDATE: Listen as you can hear panic as air traffic controllers try to divert everyone away from LaGuardia after a jet had collided with a fire truck numerous injuries and now Fatalities are being reported pic.twitter.com/sU7OjwB2ol
— R A W S A L E R T S (@rawsalerts) March 23, 2026
இன்னொரு முக்கிய விடயம், விமானத்தின் விமானியும் சக விமானியும் உயிரிழந்ததாகக் கூறப்படும் விடயம் இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை என்றும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |