பிரான்ஸ் சிறையில் பரபரப்பு சூழல்! சிறைக்காவலர்களுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸ் சிறையில் கைதி ஒருவர் இரண்டு சிறைக்காவலர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு பிரான்சில் உள்ள Conde-sur-Sarthe பகுதியில் இருக்கும் சிறையிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
Conde-sur-Sarthe-வில் உள்ள சிறையில் இரண்டு சிறைக்காவலர்கள் பிணைக்கைதிகாள பிடித்து வைக்கப்பட்டிருப்பதை பிரான்ஸ் நீதி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
சம்பவம் குறித்து நீதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, செவ்வாய்க்கிழமை கைதி ஒருவர் இரண்டு சிறைக்காவலர்களை பயங்கரமாக தாக்கி இருவரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.
கைது தாக்கியதில் சிறைக்காவலர் ஒருவருக்கு வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
சம்மந்தப்பட்ட கைதியிடம் சிறை ஊழியர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் கைதி யார்.. அவரின் பிடியில் இருக்கும் காவலர்கள் யார் போன்ற மேலதிக தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.