சென்னை புழல் சிறையில் வெளிநாட்டு கைதி உட்பட 2 கைதிகள் தப்பியோட்டம்
2 prisoners escaped from puzhal central prison: சென்னை புழல் சிறையில் 24 மணி நேரத்தில் அடுத்தது 2 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புழல் சிறையில் 2 கைதிகள் தப்பியோட்டம்
சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உட்பட 3000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு 7:00 மணிக்கு சிறை காவலர்கள், கைதிகளின் எண்ணிக்கையை சோதனை செய்தபோது, வெளிநாட்டு கைதிகள் பிரிவில் ஒருவர் குறைவாக இருப்பது தெரிந்தது.
அதன் பின்னர், திருட்டு வழக்கு தொடர்பாக ஜே.ஜே. நகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விசாரணை கைதியாக இருந்த நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் போகத் மாயமானது தெரிய வந்துள்ளது.
இது குறித்து உடனடியாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மாயாமான கைதியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
பலத்த பாதுகாப்பு மிகுந்த புழல் சிறையில் நேபாள கைதி எப்படி தப்பித்தார் என தெரியாத நிலையில், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற கைதி இன்று மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 மணி நேரத்திற்குள் 2 கைதிகள் அடுத்தது தப்பித்துள்ள நிலையில், இவர்களை பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் புழல் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.