கணவரின் உடலுக்கு உரிமை கோரிய இருவேறு மதத்தைச் சேர்ந்த மனைவிகள்
தமிழக மாவட்டம் சிவகங்கையில் உயிரிழந்த ஒருவரின் உடலுக்கு இரண்டு மனைவிகள் உரிமை கோரிய சம்பவம் நடந்தது.
அரசு பேருந்து ஓட்டுநர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் என்கிற அன்வர் உசைன்.
இந்து மதத்தைச் சேர்ந்த இவர் திருமணத்திற்கு பின்னர் இஸ்லாமிய மாதத்திற்கு மாறியுள்ளார். பின்னர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்ணொருவரையும் அவர் திருமணம் செய்துள்ளார்.
தனது முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே, பாலசுப்பிரமணியன் இரண்டாம் திருமணம் செய்திருக்கிறார்.
உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்
இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார். கணவருக்கு தங்கள் மதத்தின் முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பாலசுப்பிரமணியனின் இரு மனைவிகளும் உரிமை கோரியுள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து முறைப்படி 30 நிமிடங்கள் சடங்குகள் செய்து, பின்னர் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, பாலசுப்பிரமணியனின் முதல் மனைவி இந்து முறைப்படி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் இரண்டாவது மனைவி தங்கள் இஸ்லாமிய முறைப்படி கணவரின் உடலை நல்லடக்கம் செய்தார்.
இதற்கிடையில், அரசு சார்பில் கிடைக்கக் கூடிய சலுகைகளை யார் பெற்றுக்கொள்வது என்பது குறித்து, இரு தரப்பினரும் பேசி முடிவு செய்வார்கள் அல்லது நீதிமன்றத்தை நாடுவார்கள் என்று பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |