பிரித்தானியாவில் சீக்கியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்: இரண்டு பேர் அதிரடி கைது!
பிரித்தானியாவில் நடந்த இனவெறி தாக்குதலில் இரண்டு சீக்கியர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
பிர்த்தானியாவில் இனவெறி தாக்குதல்
பிரித்தானியாவின் வொல்வர்ஹாம்டன் ரயில் நிலையத்தின் வெளியே நடந்த சண்டையில் இரண்டு சீக்கிய டாக்சி சாரதிகள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் தாக்கப்பட்ட சீக்கிய சாரதிகள் முறையே 72 வயது ஜஸ்பீர் சங்ஹா மற்றும் 64 வயது சத்னம் சிங் ஆவர்.
முதலாவதாக, சத்னம் சிங் தாக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது சிக்கிய அடையாளமான தலைப்பாகை கீழே விழுந்துள்ளது.
இரண்டாவதாக 72 வயது ஜஸ்பீர் சங்ஹா தாக்கப்பட்டுள்ளார், அவருக்கு இரண்டு விலா எலும்புகள் சேதமடைந்துள்ள்ன.
இந்த தாக்குதல் இனவெறி தூண்டுதலாக நடத்தப்பட்ட தாக்குதல் என பொலிஸார் வழக்கு பதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவர் கைது
இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான 19, 25 வயதுடைய இருவருக்கு கைது செய்து வைத்தனர், பின்னர் அவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |