நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படைகள் அமைப்பு
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ரூ.8,000 கோடி செலவில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள்.., விரைவில் இந்திய கடற்படையில் இணைப்பு
இதையடுத்து, தெலுங்கர்கள் குறித்து பேசியதற்காக நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தலைமறைவாக உள்ளதால் அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து எழும்பூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |