பிரான்சில் திருடப்பட்ட 2 புகழ்பெற்ற ஓவியங்கள் மீட்பு: 6 பேர் வரை கைது
2 Stolen Auguste Renoir Paintings Recovered in France: பிரான்ஸில் திருடப்பட்ட 2 விலைமதிப்பற்ற ஓவியங்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட ஓவியங்கள்
கடந்த மாதம் புகழ்பெற்ற ஓவியர் பியர் அகஸ்டே ரெனுவார்(Pierre-Auguste Renoir) அவர்களின் 2 ஓவியங்கள் பிரான்சிஸ் நாட்டின் தெற்கே அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது.
இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட இந்த 2 விலைமதிப்பற்ற ஓவியங்களும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக வெள்ளிக்கிழமை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கிடைத்துள்ள தகவலின்படி, மீட்கப்பட்ட ஓவியங்கள் “1910ம் ஆண்டின் மேடம் கொலோனா ரோமானோவின் உருவப்படம்” (Portrait of Madame Colonna Romano) மற்றும் 1886 ம் ஆண்டின் “ஜூனி ஃபில் ஆப் பீயூட்ஸ்” (Jeune fille au puits) ஆகும்.

மீட்கப்பட்ட இந்த இரண்டு ஓவியங்களும் பாரிஸின் புகழ்பெற்ற ஆர்சே அருங்காட்சியகத்திற்கு சொந்தமானது மற்றும் கண்காட்சிக்காக கடனாக பெறப்பட்டது.
கைது நடவடிக்கை
ஓவியம் திருடப்பட்ட சம்பவத்தில் இதுவரை 6 சந்தேக நபர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் ஓவியங்களை எவ்வாறு கண்டுபிடித்து அதனை பத்திரமாக மீட்டனர் என்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
விசாரணையில் எந்தவொரு தடங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் கடைசி நிமிடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பும் அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது.