அமெரிக்க பணக்கார இந்தியர் பட்டியலில் இரு தமிழர்கள் - முதலிடம் யார் தெரியுமா?
2025 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவில் வசித்து வரும் பணக்கார புலம்பெயர்ந்தோரின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியா முதலிடம்
இந்த அறிக்கையின் படி, அமெரிக்காவில், 43 நாடுகளை சேர்ந்த 125 பில்லியனர்கள் வசித்து வருகின்றனர்.
இதில், 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 11 பில்லியனர்களுடன் இஸ்ரேல் மற்றும் தைவான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
தென்ஆப்பிரிக்காவை பூர்விகமாக கொண்ட எலான் மஸ்க், 393.1 பில்லியன் டொலர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
ரஷ்யாவை சேர்ந்த கூகிள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், 139.7 பில்லியன் டொலர்களுடன் 2வது இடத்திலும், தைவானை சேர்ந்த NVIDIA நிறுவன CEO Jensen Huang, 137.9 பில்லியன் டொலர்களுடன் 3வது இடத்திலும், உள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த பில்லியனர் பட்டியலில், Zscaler நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் சவுத்ரி, 17.9 பில்லியன் டொலர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவன CEO சத்யா நாதெல்லா, 1.1 பில்லியன் டொலர்களுடன், 120வது இடத்தில் உள்ளார்.
2 தமிழர்கள்
அதே போல், தமிழ்நாட்டில் பிறந்த இருவர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
மதுரையில் பிறந்த Alphabet நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, 1.1 பில்லியன் டொலர்களுடன் 119வது இடத்தில் உள்ளார்.
சென்னையில் பிறந்த கூகிள் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒருவரான கவிதர்க் ராம் ஸ்ரீராம், 3 பில்லியன் டொலர்களுடன், 64வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |