பிரித்தானியாவில் Tyne ஆற்றில் மிதந்த சிறுவர்கள்! சோகத்தில் முடிந்த மீட்பு பணி
பிரித்தானியாவின் டைன் நதியில் 14 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் மிதந்த இரண்டு சிறுவர்கள்
பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் (Northumberland) பகுதியில் டைன் நதியில் குறுக்கே அமைந்துள்ள ஓவிங்ஹாம் (Ovingham) பாலத்திற்கு அருகில் 14 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து 3 மணி அளவில் சிறுவர்கள் சிக்கலில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அவசரகால சேவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நார்தம்பர்லேண்ட் காவல்துறை, கிழக்கு ஆம்புலன்ஸ் சேவை மற்றும் நார்தம்பர்லேண்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு படைகள் இணைந்து பெரும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
14 வயது சிறுவன் உயிரிழப்பு
அதிர்ஷ்டவசமாக, 13 வயது சிறுவன் ஒருவர் ஆற்றில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், மற்றொரு சிறுவனை தேடும் பணியில் சோகமான முடிவு ஏற்பட்டது. அவரது உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் உள்ளூர் செய்தி தகவல்கள் சிறுவர்கள் ஆற்றங்கரையில் rope swing விளையாடிக் கொண்டு இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |