இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்
2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்நாடு குடும்பங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது.
இந்தியாவின் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்கள்
பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் உள்ள 300 குடும்ப வணிகங்களின் கூட்டு மதிப்பு தற்போது 1.46 டிரில்லியன் டொலராக (இந்திய மதிப்பில் ரூ.138 லட்சம் கோடி) உள்ளது.

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் இருந்து இந்த வணிகங்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
அதாவது கடந்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ. 4,076 கோடி மதிப்பு உயர்விற்குச் சமமாகும்.
இதில் ரிலையன்ஸ் குழும முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ. 25.83 லட்சம் கோடி மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
ஆதித்யா பிர்லா குழும குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ரூ. 8.14 லட்சம் கோடி மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளது.
ஜிண்டால் குடும்பம் ரூ. 8.01 லட்சம் கோடி மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த வெள்ளையன் சுப்பையா தலைமையிலான முருகப்பா குடும்பம், ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளது.

இதே போல், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷிவ் நாடார் குடும்பம் ரூ. 2.91 லட்சம் கோடி மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளது.

கௌதம் அதானி குடும்பம் ரூ.19.6 லட்சம் கோடி மதிப்புடன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் குடும்பங்களில் மிகவும் செல்வந்தர்களாக உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |