பிரித்தானியாவில் சற்றுமுன் நடந்த பயங்கரம்! சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் மோதி விபத்து., மீட்புப்பணி தீவிரம்
பிரித்தானியாவில் சாலிஸ்பரிக்கு அருகிலுள்ள சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
குறித்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7.20 மணியளவில், ஆன்டோவர் மற்றும் சாலிஸ்பரி இடையேயான பிஷர்டன் சுரங்கப்பாதையில் நடந்துள்ளது.
இந்த விபத்தில், போர்ட்ஸ்மவுத்தில் இருந்து பிரிஸ்டலுக்கு சென்ற ஒரு GWR ரயிலின் ஒரு பகுதி தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
மேலும், அதன் எதிரே லண்டனில் இருந்து ஹொனிடன் நோக்கிச் சென்ற தென்மேற்கு ரயில்வே ரயில் ஒன்று, தடம் புரண்டு அப்பகுதியில் மோதியதாகக் கூறப்படுகிறது.
இரு ரயில்களும் தடம் புரண்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ரயில் ஓட்டுநர் ஒருவர் கேபினுக்குள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற பயணிகள் பத்திரமாக இறக்கிவிடப்பட்டு, சுரங்கப்பாதையிலிருந்து தண்டவாள தடத்திலேயே வேயேற்றப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் மற்றும் வில்ட்ஷயர் பொலிஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் வரவழைக்கப்பட்டன.
இறப்புகள் மற்றும் சேதாரங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.




