பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 2 பிரித்தானிய பொலிஸார்: பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகள்
பிரித்தானியாவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் மீது குற்றச்சாட்டு
பிரித்தானியாவின் மத்திய லண்டன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு எதிராக 2 மெட் பொலிஸார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் 4 குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரிகளான 41 வயது ஜெரோம் பீஸ்லி(Jerome Beasley) மற்றும் 39 வயது லூக் ராபின்சன்(Luke Robinson) மத்திய மேற்கு கட்டளை பிரிவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
2 பொலிஸ் அதிகாரிகளும் புதன்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த அத்துமீறல் சம்பவமானது மெரிலெபோன் மேஃபேர் மற்றும் சோஹோ ஆகிய பகுதிகளில் உள்ளடங்கிய W1 பகுதியில் ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் தங்களது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மெட் தொழில்முறை தரநிலை இயக்குனரகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |