கிளப்பில் 13 மணிநேரம் வெறியாட்டம்: பிரித்தானிய இளைஞர்கள் இரண்டு பேர் உயிரிழப்பில் உள்ள பின்னணி
பிரித்தானியாவின் பிரபல கிளப்பில் 13 மணி நேர வெறியாட்டத்திற்கு பிறகு 18 வயதுடைய 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
18 வயது இளைஞர்கள் உயிரிழப்பு
பிரித்தானியாவின் கிளாஸ்கோவில்(Glasgow) உள்ள SWG3 இரவு கிளப்பில் 13 மணி நேர வெறியாட்டத்திற்கு பிறகு 18 வயதுடைய இரண்டு இளைஞர் உயிரிழந்துள்ளனர்.
அதில் ஒரு இளைஞர் கொண்டாட்டம் நடைபெற்ற பெரிய இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார், இதையடுத்து அவர் கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். மற்றொரு இளைஞர் லனார்க்ஷயரில்(Lanarkshire) உள்ள குரோய் ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்துள்ளார், அவரும் உடனடியாக ஏர்ட்ரீயில்(Airdrie) உள்ள மாங்க்லாண்ட்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் அவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் உயிரிழந்த இரண்டு 18 வயது இளைஞர்களின் பொற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தாக்கத்தால் உயிரிழந்து இருக்கலாம்
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள பொலிஸார், ஆகஸ்ட் 12 சனிக்கிழமை இரவு 11.20 மணி அளவில் குரோய் பகுதியில் இளைஞர் ஒருவர் உடல்நலக் குறைவுடன் சரிந்து விழுந்ததாக தகவல் வந்தது, மேலும் அவசர சேவைகள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
Getty
இதைப்போலவே ஆகஸ்ட் 13ம் திகதி அதிகாலை 2.20 மணி அளவில் கிளாஸ்கோவில் இளைஞர் ஒருவர் சரிந்து விழுந்து குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் தெரியவந்தது.
இதையடுத்து நடத்திய விசாரணையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் ஒரே கிளப்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர்களின் உயிரிழப்புகள் ஒரே மாதிரி இருக்கும் நிலையில், இந்த உயிரிழப்பு போதைப் பொருட்களால் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |