இதை செய்தால் அனுமதி....பிரித்தானியர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் முக்கிய அறிவிப்பு!
கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளையும், போட்டுக் கொண்ட பிரித்தானியர்கல் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளார்.
பிரித்தானியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும், இருப்பினும் இப்போது அங்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதால், பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்ட பிரித்தானிய மக்கள் ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இது தொடர்பான விவரங்கள் இம்மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார் பிரிட்டனில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
.இருப்பினும் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதன் விளைவாக பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரை 80 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 60 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸும் போடப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு தளர்வுகள் அறிவிப்பதை அரசு தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.