உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் மீது சூப் ஊற்றி தாக்குதல்: 2 பெண்கள் அத்துமீறல்
உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓவியம் மீது சூப் ஊற்றிய பெண்கள்
உலக புகழ்பெற்ற மோனா லிசா(Mona Lisa) ஓவியத்தின் மீது பெண் போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16ம் நூற்றாண்டில் கலைஞர் லியோனார்டோ டா வின்சி(Leonardo da Vinci) அவர்களால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா(Mona Lisa) ஓவியம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ள லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
French "environmental activists" have just poured an unidentified substance on Leonardo’s “Mona Lisa”.
— Visegrád 24 (@visegrad24) January 28, 2024
pic.twitter.com/chkjOzNdEl
துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் பத்திரமாக மோனா லிசா ஓவியம் வைக்கப்பட்டு இருப்பதால் இந்த சம்பவத்தின் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
பின்னணி காரணம்
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில் “உணவு அக்கறை”(food response) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து வந்த இரண்டு பெண்கள் ஓவியத்தின் மீது சூப் ஊற்றுவதை பார்க்க முடிகிறது.
மேலும், தாக்குதல் பிறகு ஓவியத்தின் முன் நின்று கொண்டு ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு" உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய்வாய்ப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தனர்.
தாக்குதல் நடந்த உடனடியாக அருங்காட்சியக பொறுப்பாளர்கள் ஓவியத்தை கருப்பு துணி கொண்டு மூடினர்.
கலைஞர் லியோனார்டோ டா வின்சி(Leonardo da Vinci) அவர்களால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா(Mona Lisa) ஓவியம் இதற்கு முன்பாகவும் பலமுறை சேதப்படுத்தப்பட்டும், ஒருமுறை திருடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |