Excuse Me என அழைத்த பெண்கள் மீது இளைஞர்கள் கொடூர தாக்குதல்
Excuse Me என அழைத்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவலி மாவட்டத்தில், பூனம் குப்தா கீதா சவுகான் என்ற இரு பெண்கள், தங்கள் குடியிருப்பு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது, அந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்து வந்த நபர், நுழைவாயிலை மறித்து கொண்டு நின்றுள்ளார்.
பெண்கள் மீது தாக்குதல்
அவரை வழிவிட சொல்வதற்காக அந்த பெண்கள் Excuse me என அழைத்துள்ளனர். மஹாராஷ்டிராவில் வசித்துக்கொண்டு, மராத்தியில் பேசாமல் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் என கூறி அந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
பின்னால் அமர்ந்திருந்த பெண் கையில் 9 மாத கைக்குழந்தையை வைத்திருந்ததையும் பொருட்படுத்தாமல் அந்த இளைஞர் அவரின் கையை முறுக்கியிருக்கிறார்.
மேலும், அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் மற்றும் 2 இளைஞர்களும் ஒன்று கூடி அந்த பெண்களை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலான பிறகும், காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
மராத்தி பேச மறுத்தால் அறையுங்கள்
சில நாட்களுக்கு முன்னர், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, வங்கிகளில் ஊழியர்கள் மராத்தி பேசுவதை உறுதிப்படுத்துமாறு தொண்டர்களிடம் கூறினார்.
மேலும், "தமிழ்நாட்டை பாருங்கள். ஹிந்தி எதிர்ப்பை எப்படி கையாள்கிறார்கள். மஹாராஷ்டிராவில் வசித்து கொண்டு மராத்தி பேச முடியாது என சொல்வதை ஏற்க முடியாது. மராத்தி பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறையுங்கள்" என பேசியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், மராத்தி பேசாமல் ஆங்கிலத்தில் பேசியதற்காக, பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |