பிரித்தானியாவில் மழலையர் பள்ளியில் மூச்சுத்திணறி 2 வயது குழந்தை உயிரிழப்பு
பிரித்தானியாவில் மழலையர் பள்ளியில் 2 வயது குழந்தை மூச்சுத்திணறலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சுத்திணறலில் 2 வயது குழந்தை உயிரிழப்பு
பிரித்தானியாவில் விகான் நகரின் பார்போல்டில் உள்ள மழலையர் பள்ளியில் 2 வயது குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்போல்ட் டக்ளஸ் சி ஆஃப் இ நர்சரி பள்ளியில்(Parbold Douglas C of E Academy Nursery) வெள்ளிக்கிழமை 2 வயது குழந்தை உணர்வற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்து குழந்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், இறுதியில் குழந்தை மரணத்தில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் குழந்தை உயிரிழப்பு குறித்த ஆவணங்கள் உள்ளூர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அதே சமயம் குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு காவல் அதிகாரிகள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |