பிரித்தானியாவில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்
பிரித்தானியாவின் அல்செஸ்டர் மற்றும் டட்லி பகுதிகளில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் 2 சோகமான சம்பவம்
திங்கட்கிழமை மாலை அல்செஸ்டரில் உள்ள ஆரோ நதியில் தவறி விழுந்த பிர்மிங்காமைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஜோஷுவா ஹில்ஸ்டெட்(Joshua Hillstead) நீரிலிருந்து மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கில் ஒரு GoFundMe பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவின் மற்றொரு பகுதியான டட்லியில்(Dudley) உள்ள லாட்ஜ் பார்ம் நீர்த்தேக்கத்தில் (Lodge Farm Reservoir) செவ்வாய்க்கிழமை காணாமல் போன 16 வயது சிறுவனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை காலை 11.30 மணிக்கு உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து தேடுதல் முடிவுக்கு வந்துள்ளது.
இரண்டு பகுதி பொலிஸாரும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், நீர்நிலைகளைச் சுற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேசிய நீர் பாதுகாப்பு மன்றத்தின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு பிரித்தானியாவில் மட்டும் 236 நீர் தொடர்பான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |