குளத்தில் கிடந்த 2 வயது பெண் குழந்தை: பெண் ஒருவரை கைது செய்த பிரித்தானிய பொலிஸார்
பிரித்தானியாவில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை
பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள குளத்தில் 2 வயது பெண் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போர்டனுக்கு அருகே கிங்ஸ்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பிறகு 2 வயது பெண் குழந்தை காணாமல் போகியுள்ளது.
Kingsley Pond. Pic: Robin Webster/Wikicommons
இதையடுத்து காணாமல் குழந்தையை தேடும் பணியில் மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்ட நிலையில், ஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள கிங்ஸ்லி குளத்தில் இருந்து குழந்தை மோசமான உடல் நிலையுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
பின்னர் திங்கட்கிழமை மாலை இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழங்கிய தகவலில், சிகிச்சை பலன் இல்லாமல் குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தது.
பெண் ஒருவர் கைது
இந்நிலையில் 2 வயது பெண் குழந்தை குளத்தில் உயிரிழந்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Wikimedia
அவர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் குழந்தையை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆறுதல் தெரிவித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |