உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி! சாமியார் மீண்டும் சர்ச்சை அறிவிப்பு
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா மீண்டும் அறிவித்துள்ளார்.
உதயநிதியின் சனாதனம்
தமிழக அமைச்சர் உதயநிதி,"கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும். அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், அவர் தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார்.
சாமியாரின் சர்ச்சை அறிவிப்பு
பின்பு, உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அவர், உதயநிதி ஸ்டாலின் போட்டாவை கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோ ஒன்றும் வெளியானது.
In UP's Ayodhya, sant Paramhans Acharya conducted a symbolic "behe@ding" using a sword and lit the poster of DMK leader Udhayanidhi Stalin for latter's remark on "Sanatan Dharma". Acharya also announced about ₹ 10 cr on Stalin's head. pic.twitter.com/jImlSKwGnt
— Piyush Rai (@Benarasiyaa) September 4, 2023
இந்நிலையில், உதயநிதி தனது கருத்தை வாபஸ் பெற்றால் நாங்களும் வாபஸ் பெறுவோம். இல்லையெனில் அவர் தப்ப முடியாது. ஏற்கனவே அவர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அறிவித்திருந்த நிலையில், அதனை உயர்த்தி ரூ.25 கோடி என அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |