விஜய் கொடுத்த ரூ.20 லட்சத்தை திருப்பி கொடுத்த பெண்
தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாயை திருப்பிய அனுப்பிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27ம் திகதி கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், இந்நிலையில் விஜய் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
இதில் கூட்டத்தில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவிக்கு சங்கவிக்கு பணம் அனுப்பப்பட்டது, விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவேன் என விஜய் கூறியிருந்தார்.
ஆனால் நேற்று மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார், இந்நிலையில் சங்கவி தனக்கு வழங்கிய 20 லட்ச ரூபாயை திருப்பி அனுப்பியுள்ளார்.
தனக்கு தெரியாமல் இறந்த கணவரின் அக்கா மற்றும் அவர்களது குடும்பத்தினர் விஜய்யை பார்க்க சென்றதாலும், விஜய் நேரில் வராத காரணத்தினாலும் பணத்தை திருப்பி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
