3 மாதங்களில் YouTube -ல் 20 லட்சம் வீடியோக்கள் நீக்கம்: Google சொல்லும் காரணம்
சமூக வலைதளமான யூடியூபில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் 20 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது என கூகுள் தெரிவித்துள்ளது.
Google Pay மூலம் மோசடி
இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை யூடியூப், கூகுள் பே போன்றவை பின்பற்றி வருகிறது. இது தொடர்பாக கூகுள் கூறுகையில், "பணப்பரிவர்த்தனை செயலியான கூகுள் பே மூலம் பணம் அனுப்புவதற்கு முன் கவனிக்க வேண்டியவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு மண்டல மொழிகளில் விழுப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கூகுள் பே மூலம் மோசமான பரிவர்த்தனை நடைபெறுகிறது என தெரிந்தால் அவை தடுக்கப்படுகின்றன. அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் கூகுள் பே -ல் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன.
20 லட்சம் வீடியோக்கள்
இந்திய நாட்டில் வீடியோ வெளியிடுவதற்கான கூகுளின் கொள்கைகள் மற்றும் விதிகளை பின்பற்றாத வீடியோக்களை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கூகுள் நிறுவனம் அதனை நீக்கி வருகின்றன.
அந்த வகையில், கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாத 20 லட்சம் யூடியூப் வீடியோக்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.தொடர்ந்து மோசடிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |