உலகின் பிரபலமான டாப் 20 ஆப்களின் பட்டியல்; 3 ஆண்டுகளாக முதலிடத்தில் TikTok
உலகில் மிகவும் பிரபலமான முதல் 20 ஆப்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் TikTok முதலிடத்தை பிடித்துள்ளது.
ஸ்மார்ட்போன் என்பது இன்று நாம் பயன்படுத்தும் சாதனம் மட்டுமல்ல. ஸ்மார்ட்ஃபோன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. சமூக ஊடகங்கள், செய்தி அனுப்புதல், பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் என இன்று ஸ்மார்ட்போன் ஆப்ஸ் மூலம் பல விஷயங்களை மிக விரைவாகச் செய்ய முடிகிறது.
உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் 20 ஆப்களின் பட்டியலை சென்சார் டவர் தொகுத்துள்ளது. அந்த ஆப்கள் என்ன?
1, டிக் டாக் (TikTok)
டிக் டோக் பொதுவாக செயலிகள் (Apps) ராஜா என்று அழைக்கப்படுகிறது. Tik Tok என்பது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக உலகின் மிகவும் பிரபலமான செயலியாகும். இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், இது உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்றாகும்.
2, இன்ஸ்டாகிராம் (Instagram)
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், டிக் டாக்கின் வில்லன். ரீல்களும் ஸ்டோரீஸ்களும் மக்களை இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் வைத்திருக்கின்றன.
3, முகநூல் (Facebook)
ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புகார்கள் இருந்தாலும், இன்றும் அதிகமான பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் தரவரிசையில் ஃபேஸ்புக் முதலிடத்தில் உள்ளது.
4, பகிரி (WhatsApp)
வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றாகும். இன்று பெரும்பாலான மக்கள் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப WhatsApp-ஐ பயன்படுத்துகின்றனர்.
5, கேப்கட் (Capcut)
கேப்கட் என்பது டிக்-டோக்கின் பிரபலத்தால் பிரபலமடைந்த ஒரு செயலி ஆகும். கேப்கட் பயனர்கள் TikTok அல்லது பிற குறுகிய வீடியோ தளங்களுக்கு ஏற்ற வீடியோக்களை எடிட் செய்து தயாரிக்க உதவுகிறது.
மேலும் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆப்களில் பிரபலமான Telegram 6-வது இடத்திலும், Snapchat 7-வது இடத்திலும், X (Twitter) 15-வது இடத்திலும், Youtube 16-வது இடத்திலும் உள்ளன.
பிரபலமான டாப் 20 ஆப்களின் முழு பட்டியல் இதோ.,
- TikTok
- Capcut
- Telegram
- Snapchat
- Spotify
- Temu
- Messenger
- JioCinema
- Shein
- WhatsApp Business
- Twitter (X)
- YouTube
- Netflix
- Amazon
- Picasart AI
- Canva
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |