காதலர் உயிரிழந்த துக்கத்தில் 20 வயது மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு
தமிழக மாவட்டம் நாமக்கல்லில் காதலர் இறந்த துக்கத்தில் இருந்த மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாரா மெடிக்கல் மாணவி
நாமக்கல் அருகே உள்ள பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த பாரா மெடிக்கல் மாணவி விஜயலட்சுமி (20).
இவர் சேலத்தைச் சேர்ந்த உறவினரான வினோத் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் வினோத் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி விஜயலட்சுமி, கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
பரிதாப உயிரிழப்பு
கடந்த 21ஆம் திகதி விஜயலட்சுமி தனது வாடகை வீட்டில் மயங்கி கிடந்தார். அவர் விஷம் அருந்தியதை அறிந்த சக மாணவிகள், உடனே விஜயலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மாணவி விஜயலட்சுமி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவியின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |