அனைவராலும் நேசிக்கப்பட்ட 20 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் கல்லூரி கூடைப்பந்து வீராங்கனை மோட்டார் வாகனம் மோதியதில் உயிரிழந்தது பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது.
கல்லூரி கூடைப்பந்து வீராங்கனை
நியூயார்க்கின் பாட்ஸ்டாம் நகரில் அதிகாலை வேளையில், இளம்பெண்ணொருவர் மோட்டார் வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது எமிலி மே ஸ்மித் (20) என்ற கல்லூரி கூடைப்பந்து வீராங்கனை என தெரிய வந்தது.
அவரை மோதிய வாகனம் கருப்பு நிற காடிலாக் எஸ்கலேட் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டது.
சந்தேக நபர் கைது
அதனைத் தொடர்ந்து, நான்கு மணிநேரத்திற்குப் பிறகு காவல்துறை அதிகாரிகள் 18 வயதான ஜேக்கப் டி.க்ரைஸ் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.
அவர் மீது விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றது, போதையில் வாகனம் ஓட்டியது மற்றும் அபாயக் குறியீடுகளை மீறி வாகனம் ஒட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், உயிரிழந்த எமிலி கல்லூரியில் அனைவராலும் விரும்பப்பட்ட கூடைப்பந்து மாணவியாக இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
அவரது தலைமைப் பயிற்சியாளர் பிரிட்னி கோஹன் கூறுகையில், "எங்கள் அணியின் தலைவரான எமிலியின் இழப்பால் நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். அவர் ஒரு மிகச்சிறந்த இளம் பெண்மணி; தனது அணியினர், பயிற்சியாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த அனைவராலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர். அவரது இருப்பை நாங்கள் பெரிதும் இழப்போம். இந்த மிகவும் கடினமான நேரத்தில், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடன் துணை நிற்கும்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |