20 வயது இளைஞருக்கு மார்பில் கத்திக்குத்து: பிரித்தானியாவில் 3 பேர் அதிரடியாக கைது
பிரித்தானியாவின் வுல்வர்ஹாம்ப்டன் நகரில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
20 வயது இளைஞருக்கு கத்திக்குத்து
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் வுல்வர்ஹாம்ப்டன்(Wolverhampton) நகரின் மையப்பகுதியில் கிளாரன்ஸ் தெருவில்(Clarencr Street) அமைந்துள்ள கார் பார்க்கிங்கில் இளைஞர் ஒருவர் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இளைஞரை கண்டுபிடித்து தேவையான முதலுதவி சிகிச்சையை வழங்கினர். இருப்பினும் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்த கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பொலிஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருப்பின், உடனடியாக முன்வந்து காவல்துறையினருக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
3 பேர் கைது
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் காவல்துறையினர் 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தகவலின் படி, 32 வயதுடைய நபர் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன், 66 வயது நபர் மற்றும் 59 வயதுடைய பெண் என இருவர் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |