200 கோடி லொட்டரியில் வென்ற பிரித்தானியர்: முதலில் வாங்கிய பொருள் என்ன தெரியுமா?
லொறி சாரதியான பிரித்தானியர் ஒருவருக்கு லொட்டரியில் 5.2 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
200 கோடி வென்ற பிரித்தானியர்
இங்கிலாந்திலுள்ள பார்க்கிங் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் கேரி மெக்டொனால்ட் (Gary MacDonald).
கேரி, லொறி சாரதியாக பணி புரிந்துவந்தார். சமீபத்தில் அவருக்கு லொட்டரியில் 5.2 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. இலங்கை மதிப்பில் அது 2,06,90,60,240.00 ரூபாய் ஆகும்.
முதலில் வாங்கிய பொருள் என்ன தெரியுமா?
லொட்டரியில் இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைத்ததும் முதல் வேலையாக லொறி சாரதி வேலையை விட்டுவிட்டார் கேரி.
என்றாலும், உடனடியாக ஆடம்பர செலவு எதையும் அவர் செய்யவில்லை. சொல்லப்போனால், முதலில் அவர் வாங்கிய பொருள் ஒரு வாக்யூம் கிளீனர்.
அதுவும், குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் ஆஃபர் ஏதாவது உள்ளதா என்று பார்த்துதான் அதையும் வாங்கினாராம் கேரி.
நான் எளிமையான பின்னணி கொண்டவன். ஆகவே, ஆடம்பரமாக செலவு செய்வதில் எனக்கு விருப்பமில்ல என்கிறார் கேரி.
லொட்டரியில் பரிசு விழுந்ததைத் தொடர்ந்து, தன் நீண்ட கால காதலியான அனிதாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் கேரிக்கு, ஃபார்முலா ஒன் கார் ரேஸ் பார்க்க ஆசையாம். அந்த ஆசையை மட்டும் நிறைவேற்றிக்கொள்ள இருக்கிறாராம் கேரி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |