லண்டன்வாசிகள் சிலருக்கு விதிக்கப்பட்ட 200 பவுண்ட் அபராதம்! அபத்தமான காரணத்தால் பொலிசார் அதிரடி
லண்டன் நகரத்தில் ஷாப்பிங் செய்வது மிக கடினமாக இருப்பதாக கூறியதால், அங்கிருந்து கோட்ஸ்வொல்ட்ஸுக்கு வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பொதுவாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகரான லண்டன் மற்றும் கிழக்கு இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அங்கு மக்கள் அத்தியாவசியமன்றி, தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தலைநகர் லண்டன் பகுதியில் இருந்து Gloucestershire-ன் Cotswold மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு தேவையற்ற முறையில் பயணித்தற்காக 200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Another Covid ticket handed out in Lower Slaughter. The drivers excuse for the 300 mile round trip was that it was very hard to go shopping in London. #£200DayOut #Charlie9251 #Andy2761 pic.twitter.com/T2Ow6Br5T9
— Cotswolds Police (@CotswoldsPolice) January 31, 2021
மேலும், அவர்கள் அபத்தமான காரணம் கூறியதாக Cotswolds பொலிசார் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள பதிவில், 300 மைல் தூரத்தில் இங்கு வந்ததற்கு காரணம் கேட்டால், அவர்கள் லண்டனில் ஷாப்பிங் செய்வது கடினம் என்று தேவையற்ற காரணத்தை கூறியதாகவும், இதனால், அவர்கள் கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இரண்டு மணி நேரம் கழித்து, Cotswold மாவட்டத்திற்கு பயணம் செய்த வெவ்வேறு லண்டன் வாசிகளுக்கு பொலிசார் அபராதங்கள் விதித்துள்ளனர்.
We thought it was supposed to be lockdown? Apparently not in Bourton?! 2 covid tickets handed out to tourists from London and mutliple warnings given. #Charlie9251 pic.twitter.com/ctc66Q9caP
— Cotswolds Police (@CotswoldsPolice) January 31, 2021
பொலிசார் இது குறித்து மீண்டும் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில், இப்போது ஊரடங்கில் இருக்கிறோம், வெளிப்படையான பிரித்தானியா இல்லை.
லண்டனில் இருந்து சுற்றுலாப்பயணிகள் இரண்டு பேருக்கு அனுமதிக்கான இரண்டு கோவிட் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விதிமுறைகள் கடுமையாக இருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வெள்ளிக் கிழமை லண்டனில் இருக்கும் Soho-வில் pyjama party-வைக்க முயன்ற 15 பெண்களுக்கு 200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த வாரம், பொலிசாருக்கு புதிய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொறுப்பற்ற நடத்தை, பொது சுகாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்று ஏதேனும் நடந்தால், அதை உடனடியாக நிறுத்தவோ அல்லது மூட வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்தே, இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க நடைமுறையில் உள்ள விதிகளை அமல்படுத்த தேவையான அதிகாரங்கள் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.