பிரபல நடிகரின் வீட்டில் மலை போல் குவிந்துள்ள ரூ.2000 நோட்டுகள்
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
எனவே மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என கூறி அதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான வி்ஷ்ணு மஞ்சு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மலை போல் குவிந்து கிடக்கும் 2000 ரூபாய் நோட்டுகளின் புகைப்படத்தை பகிர்ந்து, நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டுக்கு சென்ற போது எடுத்த புகைப்படம் இது, 2000 ரூபாய் நோட்டுகளை என்ன செய்வார் என கேட்டிருந்தார்.
Photo was taken when I visited Sri. @vennelakishore garu home. I wonder what he will do with these 2000₹ notes. ? pic.twitter.com/bLApojXxyA
— Vishnu Manchu (@iVishnuManchu) May 20, 2023
மலைபோல் குவிந்து கிடக்கும் 2000 ரூபாய் நோட்டுகளின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், விளக்கம் ஒன்றை அளித்துள்ள நடிகர் விஷ்ணு மஞ்சு, கிஷோரை வைத்து நகைச்சுவையாக நான் சொன்னதை ஊடகங்கள் தவறாக சித்தரித்து விட்டன.
எனக்கும் அவருக்கும் இதுபோன்ற வேடிக்கையான விஷயங்கள் நடப்பது இயல்பானதே, நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு இது புரியும், அப்படி புரியாதவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
My joke on Kishore @vennelakishore is taking different turns by some genius new portals ( not the legit and genuine news networks). Almost everyone knows that Kishore and I always have funny banter fights. And everyone with a little bit of humor also understands that it s a joke.…
— Vishnu Manchu (@iVishnuManchu) May 22, 2023