பிரான்சில் ஒவ்வொரு நாளும் 2000 பிரித்தானியா கொரோன வைரஸ்! ஆபத்தின் நெருக்கடி: வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்தே செல்வதால், அதை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான முடிவை நோக்கி அரசு இருப்பதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டில் ஊரடங்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி வந்தாலும், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
இதனால் கொரோனாப் பெருந்தொற்றுக்குள் இருந்து இன்னுமொரு பெருந்தொற்று உருவாகிவிடக் கூடாது என்பதால், அதை தவிர்ப்பதற்கு மிகவும் இறுக்கமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
நாட்டில், ஒவ்வொருநாளும் சராசரியாக 20,000 பேர் கொரோனாவால் புதித்தாக பாதிக்கப்படுகிறது. அதில், ஒவ்வொரு நாளும் 2,000 பிரித்தானிய வைரசின் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் 250 கொரோனாத் தொற்று நோயாளிகள் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் மருத்துவமனைகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. பல மருத்துவமனைகளில் இருந்து வேறு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் மாற்றப்படுகின்றனர். இது ஆபத்தின் நெருக்கடியாக உள்ளதால், அரசு கடுமையான முடிவை நோக்கி அரசு இருப்பதாக சுகாதார அமைச்சர்ஒலிவியே வெரோன் கூறியுள்ளார்.