தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு
ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான அரிய கலை பொருட்கள் அடங்கிய புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2000 ஆண்டுகால பழமையான புதையல்
வடக்கு ஜேர்மனியில் ரோமானிய கால நாணயங்கள் மற்றும் கலைப் பொருட்கள் அடங்கிய சுமார் 2000 ஆண்டுகால பழமையான புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதையல் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஹில்டெஷெய்ம் மாவட்டத்தில் உள்ள போர்ஸம் என்ற இடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தனியார் உலோக கண்டறிவிப்பாளர் இதை கண்டுபிடித்த நிலையில், அரசு இதனை தெரியப்படுத்தாமல் 8 ஆண்டுகளாக மறைத்து வைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2025ல் இந்த புதையல் குறித்து NLD அதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த முக்கிய தகவலை அக்டோபர் மாதம் லோயர் சாக்சனி மாநில நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு அலுவலகம் (NLD) வெளியிட்டுள்ளது.
புதையலில் என்ன இருந்தது?
லோயர் சாக்சனியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதையல் இதுவாகும்.

இதில், ரோமானிய பேரரசு காலத்தைச் சேர்ந்த 450 வெள்ளி நாணயங்கள், வெள்ளிக் கட்டி ஆகியவை இருந்துள்ளது.
அத்துடன் ஒரு தங்க மோதிரம், தங்க நாணயம் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |