ஐம்பதாயிரம் TO ரூ.20 ஆயிரம் கோடி! கடும் உழைப்பால் முன்னுக்கு வந்த ஓலா நிறுவனரின் கதை
உலகின் டாப் 500 இளம் பில்லியனர்கள் வரிசையில் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் ஒருவரான ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வாலின் (Ola Bhavish Aggarwal) வளர்ச்சியை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஓலா நிறுவனம்
எலெக்ட்ரிக் டூவீலர் (Electric two-wheeler) தயாரிப்பு நிறுவனமான ஓலா நிறுவனம், கடந்த 2017 -ம் ஆண்டு பெங்களூருவில் பவிஷ் அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்டது.
இன்றுவரை இந்த நிறுவனத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதனை மாற்றி பாசிட்டிவாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனமானது வாடகை கார், ஸ்கூட்டர்(Scooter) தயாரிப்பு, பேட்டரி (Battery) உற்பத்தி, டேட்டா கிரியேஷன் (Data Creation) என்று பல விடயங்களில் முன்னேறி செல்கிறது.
இந்நிலையில், ஓலா நிறுவனமானது IPO (Initial Public Offering) எனும் ஷேர் மார்க்கெட்டிலும் கால் தடத்தை பதித்துள்ளது.
ஒரு தனியார் நிறுவனம் தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பது தான் IPO. ஹூண்டாய் (Hyundai), டாடா (Tata) போன்ற நிறுவனங்கள் IPO Share market -ல் கொடிகட்டி பறக்கும் நிலையில் ola -வும் இணைந்தது.
இங்கிலாந்தில் பழம் சாப்பிட்டு இஸ்ரேலில் மரக்கன்றுகள் வாங்கி.., கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர் யார்?
பங்குச்சந்தையில் ஒரு ஷேருக்கு ரூ.76 எனும் விலையில் ola நிறுவனம் களமிறங்கியது. இதனால், அதிக லாபத்தை பெற்று 18 சதவீதம் வரை பங்கு உயர்ந்தது.
இதனால் ஓலாவில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக லாபம் கிடைத்ததால் ஓலாவின் தலைவர் பவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பும் இரு மடங்காக உயர்ந்தது.
ஏற்கனவே, 1.2 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் இருந்த பவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டொலராக உயர்ந்தது. இந்த தகவல் Bloomberg Billionaires என்ற வலைத்தளம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெறும் ரூ.50 ஆயிரத்தை வைத்து தொழில் தொடங்கிய பவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பு தற்போது ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இவரை, இந்தியாவின் எலான் மஸ்க் என்று சிங்கப்பூரில் உள்ள தேசியப் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் நிதின் பங்கார்கர் புகழ்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |