2,000 ஆண்டுகள் பழமையான ரோமானிய பாஸ்ட்ஃபுட் கடை! தொல்பொருள் ஆராய்ச்சியில் வெளிவந்த அதிசயங்கள்
தெற்கு இத்தாலி பகுதியில் இருந்த பண்டைய ரோமன் நகரமான பொம்பெயி (Pompeii) கி.பி 79-ல் அருகிலுள்ள வெசுவியஸ் மலையில் எரிமலை வெடித்ததில் கொதிக்கும் எரிமலைக் கடலில் புதைந்ததாக தொல்பொருள் ஆராய்சசியின் முலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகரத்தில் 2,000 முதல் 15,000 மக்கள் அழிந்ததாக கூறப்படுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதியில் தொடர்ந்து கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்போது பொம்பெயின் சாம்பலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான துரித உணவு கடை புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய ரோமானியர்களின் சிற்றுண்டி பழக்கம் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய தடயங்களை அளித்துள்ளது.
பாலிக்ரோம் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டு, எரிமலைச் சாம்பலால் உறைந்திருந்த இந்த சிற்றுண்டி கவுண்டர், கடந்த ஆண்டு ஓரளவு வெளியேற்றப்பட்ட நிலையில், இப்போது அந்த தளம் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சில்வர் வெட்டிங் தெரு மற்றும் ஆலி ஆஃப் பால்கனீஸின் பரபரப்பான சந்திப்பில், தெர்மோபோலியம் என அழைக்கப்படும் சூடான தின்பண்டங்கள் கிடைக்கும் ஒரு கடை (ஒரு துரித உணவு சிற்றுண்டி) எங்கு இருந்துள்ளது.
இங்கு வாத்து எலும்பு துண்டுகள் மற்றும் பன்றிகள், ஆடுகள், மீன் மற்றும் நத்தைகள் ஆகியவற்றின் மீதங்கள் மண் பாத்திரங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. சில பொருட்கள் ரோமானிய கால பேலாவைப் (Paella-உணவு வகை) போல ஒன்றாக சமைக்கப்பட்டுள்ளன.
நொறுக்கப்பட்ட ஃபாவா பீன்ஸ், மதுபானங்களின் சுவையை மாற்ற பயன்பட்டுள்ளது, அவை ஒரு குடுவையின் அடிப்பகுதியில் காணப்பட்டன.
ஆம்போரா எனப்படும் ஒரு நீர் கோபுரம் மற்றும் ஒரு நீரூற்று ஆகியவை மனித எச்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 50 வயதுடையதாக நம்பப்படம் ஒரு மனிதனின் உடல்கள் மற்றும் ஒரு குழந்தையின் படுக்கைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய பணி கட்டத்தில், ரோமானியர்களின் மெனுவில் இருந்ததாக நம்பப்படும் விலங்குகளின் சித்தரிப்புகள், குறிப்பாக மல்லார்ட் வாத்துகள் மற்றும் சேவல் ஆகியவை, ஒயின் அல்லது சூடான பானங்களுடன் எடுத்துக்கொள்ளப்பட்ட பல ஓவியக் காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக்க ஒரு நெரெய்ட் நிம்ஃப் ஒரு கடல் குதிரை மற்றும் கிளாடியேட்டர்களை சவாரி செய்யும் ஒரு உருவத்தை தாங்கிய ஒரு சுவரோவியம் கண்டுபிடிக்கப்பட்டது. ரோமானிய உலகில் தெர்மோபோலியம் மிகவும் பிரபலமாக இருந்தது தெரியவந்துள்ளது.
44 ஹெக்டேர் (110 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான தளம் (Pompeii) ரோமானிய பேரரசின் பணக்கார நகரங்களில் ஒன்றாகும். சாம்பல் அடுக்குகள் பல கட்டிடங்களையும் பொருட்களையும் ஏறக்குறைய அழகிய நிலையில் புதைத்தன, இதில் பாதிக்கப்பட்டவர்களின் சுருண்ட சடலங்கள் அடங்கும்.
ரோமில் உள்ள கொலிசியத்திற்குப் பிறகு இத்தாலியின் அதிகம் பார்வையிடப்பட்ட இரண்டாவது இடமாக பொம்பெயி உள்ளது, கடந்த ஆண்டு நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது.