கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் CSK ஒழுங்கா விளையாடாம போனதுக்கு இதுவே காரணம்! வெளிப்படையாக கூறியதீபக் சஹர்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சென்னை அணி சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பது குறித்து அந்தணி வீரர் தீபக் சஹார் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியவில்லை.
இந்நிலையில், இது குறித்து அந்தணி வீரர் தீபக் சஹார் கூறுகையில் சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் எனக்கு, அதேபோல ருத்ராஜ் மற்றும் ஒரு சில முக்கிய நபர்களுக்கு கொரோனா உறுதியானது.
எனவே அதிலிருந்து நாங்கள் முழுமையாக மீள சில காலம் தேவைப்பட்டது. எங்களால் எங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட முடியாமல் போனது. அது மட்டுமின்றி சென்ற ஆண்டு நிறைய வீரர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர் அதன் காரணமாகவே எங்களால் சென்ற ஆண்டு மிக சிறப்பாக செயல்பட முடியவில்லை.
சென்ற ஆண்டு சில பிரச்சனைகளால் சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட முடியாமல் இந்திய நாட்டிற்கு திரும்பினார். அவரது இடத்தில் சரியாக விளையாட நல்ல வீரர் இல்லாத காரணத்தினால் நாங்கள் மேலும் சில போட்டிகளில் தடுமாறினோம்.
ஆனால் அவற்றையெல்லாம் சரி செய்து கொண்டு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக ஓரணியாக நாங்கள் செயல்பட்டோம். அதன் காரணமாகவே எங்களால் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற முடிந்தது என்று கூறியுள்ளார்.